என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிராமசபை கூட்டம்- கமல்ஹாசன் நாளை உரையாற்றுகிறார்
சென்னை:
மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான ஏப்ரல் 24 அன்று தமிழகமெங்கும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதிகாரங்களைப் பரவலாக்கும் பஞ்சாயத்து ராஜ் சட்டம் குறித்தும், கிராம சபைகள் குறித்தும் பரவலான விழிப்புணர்வைக் கொண்டுவந்து கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் பங்கேற்பை அதிகப்படுத்தியதில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் அளப்பரிய பங்களிப்பு தமிழகம் அறிந்ததே.
மாதிரி கிராமசபைக் கூட்டங்கள் நடத்தி, கிராம சபை கூட்டங்களில் நேரடியாகப் பங்கேற்று கிராம சபைகளின் உரிமைகளுக்காகக் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் கமல்ஹாசன், தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான நாளை (ஞாயிற்றுக்கிழமை), காலை 10 மணிக்கு மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்களை கிராம வளர்ச்சிக்கான உறுதிமொழி எடுக்கச்செய்து உரையாற்ற உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... சென்னை ஐ.ஐ.டியில் கொரோனா பாதிப்பு 55-ஆக உயர்வு






