என் மலர்
உள்ளூர் செய்திகள்

இன்று சென்னை வரும் அமித்ஷாவுக்கு தாம்பரத்தில் வரவேற்பு-பா.ஜனதாவினர் ஏற்பாடு
சென்னை:
புதுவை மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமித்ஷா டெல்லியில் இருந்து இன்று இரவு 7 மணியளவில் சென்னை விமான நிலையம் வருகிறார்.
விமான நிலையத்தில் அவரை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை எம்.ஆர்.காந்தி, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், டாக்டர் சரஸ்வதி ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள், மற்றும் முக்கிய நிர்வாகிகள் வரவேற்கிறார்கள்.
விமான நிலைய வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் காரில் ஆவடி புறப்பட்டு செல்கிறார். இரவில் மத்திய ரிசர்வ் போலீஸ்படை முகாம் விருந்தினர் இல்லத்தில் தங்குகிறார்.
நாளை காலை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புதுவை செல்கிறார். புதுவை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு ஆந்திரா செல்கிறார்.
விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு ஆவடி செல்லும் அமித்ஷாவுக்கு செங்கல்பட்டு மாவட்ட பா.ஜனதா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியன் கூறியதாவது:-
அமித்ஷா விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம், தாம்பரம், இரும்புலியூர், மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக ஆவடி செல்கிறார்.
விமான நிலையத்தின் எதிரில் சென்னை மாவட்ட பா.ஜனதா சார்பிலும், ஆவடியில் திருவள்ளூர் மாவட்ட பாஜனதா சார்பிலும் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
தாம்பரம் தாலுகா அலுவலகம் அருகில் செங்கல்பட்டு மாவட்ட பா.ஜனதா சார்பில் வரவேற்பு கொடுக்கப்படுகிறது.
மேளதாளங்கள், கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் தொண்டர்கள் திரண்டு மாவட்ட எல்லை யான தாம்பரத்தில் இருந்து வழிநெடுக வரவேற்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமித்ஷா நாளை காலையில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் கண்ணூர் வீடு அருகே குண்டு வீச்சு






