என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளம் தூர்வாரும் பணி ஆய்வு
    X
    குளம் தூர்வாரும் பணி ஆய்வு

    கடலூர் அருகே குளங்களை தூர்வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை

    நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் சசிகலா தலைமையில் நகராட்சி மண்டல பொறியாளர் கருப்பையா நெல்லிக்குப்பம் பகுதியில் தோண்டப்பட்ட குளத்தையும், புதிதாக குளம் தூர்வாரும் பணியை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் 5 பகுதிகளில் குளம் தூர்வாரும் பணி நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் ஊழியர்கள் நியமனம் செய்து மேற்கொண்டு வருகின்றனர்.

    நேற்று வான்பாக்கம் சாலையில் 26 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக குளம் தூர்வாரும் பணியை நகர மன்றத் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    இதனைத்தொடர்ந்து நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் சசிகலா தலைமையில் நகராட்சி மண்டல பொறியாளர் கருப்பையா நெல்லிக்குப்பம் பகுதிக்கு திடீரென்று வந்தனர். பின்னர் ஏற்கனவே தோண்டப்பட்ட குளத்தையும், புதிதாக குளம் தூர்வாரும் பணியை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் பணி அமர்த்தப்பட்ட பணியாளர்கள் மூலம் பணிகள் நடைபெறுகிறதா? அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு குளம் தூர்வாரப்பட்டு உள்ளதா? என்பதனை பார்வையிட்டு அதிகாரியிடம் கேட்டறிந்தனர். பின்னர் நகராட்சியில் நடைபெறும் பல்வேறு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து அரசு உத்தரவின்படி விரைவில் குளங்களை தூர்வாரி மழை நீர் சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர். அப்போது நகர்மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் கிரிஜா திருமாறன், ஆணையாளர் பார்த்தசாரதி, பொறியாளர் பாண்டு, துப்புரவு அலுவலர் சக்திவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×