என் மலர்
உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் ஆர்.டி.ஓ ரஞ்சித் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
டெல்டா மாவட்டங்களில் ஆறு, ஏரி, வாய்க்கால்களை உடனே தூர்வார வேண்டும் ஆர்.டி.ஓ.விடம் விவசாயிகள் மனு
தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் ஆறு, ஏரி, வாய்க்கால்களை உடனே தூர்வார வேண்டும் என ஆர்.டி.ஓ.விடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஆர்.டி.ஓ ரஞ்சித் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன் தலைமையில் விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது
வருகிற ஜூன் 12ம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதற்கான ஏற்ற சூழ்நிலை தற்போது உள்ளது.
இடையில் மே மாதம் மட்டுமே உள்ள சூழ்நிலையில் இதுவரை தூர்வாரும் பணிகள் நடைபெறாமல் உள்ளது. தொடர்ந்து கடந்த ஆண்டுகளைப் போல நீர் பாய்ச்-சுவதும், வடிகால் பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க தண்ணீர் திறப்பதற்கு முன்பாக தூர் வாரிய வேண்டும்.
எனவே விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து ஆறுகள், பாசன வாய்க்கால்கள், ஏரிகள், வடிகால் வாய்க்-கால்களை உடனடியாக போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதேபோல் தெற்கு ஆம்பலாப்பட்டு சேர்ந்த விவசாயி தங்கவேல் அளித்-துள்ள மனுவில், எங்கள் ஊரில் பல மாதங்களாக தெருவிளக்குகள் 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கிறது.
இதனால் மின்சாரம் செலவு அதிகமாகிறது. எனவே இரவில் மட்டுமே தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Next Story






