search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைக்க முடிவு
    X
    பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைக்க முடிவு

    விழுப்புரம் நகர் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைக்க முடிவு

    தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து விற்பனையில் ஈடுபடும் கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
    விழுப்புரம்:

    தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனையில் ஈடுபடும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

    அதன்படி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவின் பேரில்தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்தும் மற்றும் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் விழுப்புரம் நகராட்சி ஆணையாளர் நரேந்திரா ஷா அறிவுறுத்தலின் பேரில் நகர்நல அலுவலர் டாக்டர் பாலசுப்ரமணியன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    விழுப்புரம் மகாத்மா காந்தி சாலைபகுதியில் உள்ள கடைகளில் நகர்நல அலுவலர் டாக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் சானிட்டரி இன்ஸ்பெக்டர்கள் ரமணன், திண்ணைய மூர்த்தி, செல்வராஜ் நகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது மளிகை கடைகள், பல்பொருள் அங்காடி, பெட்டிக்கடை, பழக்கடைகள் உள்ளிட்ட 10 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்காக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த கடைகளில் இருந்த 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு கடை உரிமையாளர் களுக்கு மொத்தம் ரூ.3,500 அபராதம் விதித்தனர். இதுகுறித்து ஒரு அதிகாரி தெரிவிக்கையில்விழுப்புரம் நகரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து விற்பனையில் ஈடுபடும் கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
    Next Story
    ×