என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் விஷ்ணு மஞ்சள் பைகளை சிப்காட் ஊழியர்களுக்கு வழங்கிய காட்சி.
    X
    கலெக்டர் விஷ்ணு மஞ்சள் பைகளை சிப்காட் ஊழியர்களுக்கு வழங்கிய காட்சி.

    நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்- கலெக்டர் விஷ்ணு பேட்டி

    நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என கலெக்டர் விஷ்ணு கூறினார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் துறை சார்பாக நெல்லை மாவட்ட சிப்காட் தொழிற்சாலை கூட்டமைப்பு மூலம் மீண்டும் மஞ்சள் பை திட்டம் குறித்து மாவட்டம் முழுவதும் வீடியோ காட்சிகளுடன் மஞ்சள் பை பயன் குறித்து விழிப்புணர்வு பிரசார பயணத்தை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விஷ்ணு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதனைத்தொடர்ந்து புவி வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டு பிளாஸ்டிக்கை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்துவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

    பிரசார பயணம் இன்று முதல் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கிராமங்கள் வாரியாக சென்று மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு  செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தாமிரபரணி நதியில் மெகா தூய்மை பணி  நாளை (சனிக்கிழமை) முதல் நடைபெறு-கிறது. மேற்கு தொடர்ச்சி மலை காணி குடியிருப்பு தொடங்கி மருதூர் அணைவரை 62 கிலோ மீட்டர் தூரம் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளி& கல்லூரி தன்னார்வலர்கள் மூலம் இந்த தூய்மை பணி நடைபெறுகிறது.

    தமிழக அரசு உத்தரவுப்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். தமிழகத்தில் கொரோனா 4-வது அலை வருவதற்கான தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

    எனவே அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் அரசு அறிவித்துள்ள நோய்  தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும்.

    நெல்லை மாவட்டத்தில் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.முதற்கட்டமாக விழிப்புணர்வு மூலம் பொதுமக்கள் மீண்டும் முககவசம் அணிய அறிவுறுத்தப்படுவார்கள் .

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×