என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  தி.மு.க. நிர்வாகியை தாக்கியவர் மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தி.மு.க.நிர்வாகியை தாக்கிய காண்டிராக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
  வருசநாடு:

  தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள நரியூத்து பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியை ஒப்பந்தகாரரான மேலபட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவர் மேற்கொண்டு வருகிறார்.

  பணிகளின் தரம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது நரியூத்து பகுதியை சேர்ந்த தி.மு.க. கிளைச்செயலாளர் கர்ணன் (42) என்பவர் பணிகள் தரமற்ற முறையில் நடப்பதாக அதிகாரிகளிடம் புகார் செய்தார்.

  இதனையடுத்து தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள அறிவுரை வழங்கிவிட்டு அதிகாரிகள் சென்று விட்டனர். அதன் பிறகு கர்ணனிடம் எப்படி என்னைப்பற்றி புகார் தெரிவிக்கலாம் என்று ரமேஷ் தகராறு செய்ததுடன் அவரை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த கர்ணன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×