என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சைக்கிள் பிரசார பயணம்
    X
    சைக்கிள் பிரசார பயணம்

    இளைஞர்களுக்கு வேலை வழங்க கோரி சைக்கிள் பிரசார பயணம்

    புதுச்சேரி பயண குழு கடலூர் சாவடி பகுதியிலிருந்து சைக்கிள் பிரசார பயணம் தொடங்கி செம்மண்டலம் லாரன்ஸ் ரோடு வழியாக பாதிரிகுப்பம் மற்றும் திருச்சிக்கு மே 1-ம் தேதி சென்றடைய உள்ளனர்.
    கடலூர்:

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடலூர் மாநகர குழு சார்பில் அரசுத்துறை நிறுவனங்களின் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

    என்.எல்.சி.யில் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முன்னுரிமை வழங்க வேண்டும். என்.எல்.சி, சி.எஸ்.ஆர் நிதியை மாவட்ட மக்களின் மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் கோரிக்கையை வலியுறுத்தி சைக்கிள் பிரசார பயணம் சென்னை, கோவை, புதுச்சேரி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் சைக்கிள் பேரணியாக சென்றனர்.

    இவர்களில் புதுச்சேரி பயண குழு கடலூர் சாவடி பகுதியிலிருந்து சைக்கிள் பிரசார பயணம் தொடங்கி செம்மண்டலம் லாரன்ஸ் ரோடு வழியாக பாதிரிகுப்பம் மற்றும் திருச்சிக்கு மே 1-ம் தேதி சென்றடைய உள்ளனர். பின்னர் பிரச்சார பயணம் தொடர்பாக கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பயணக் குழு தலைவரும் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் கடலூரில் வரவேற்பளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாநில துணைச்செயலாளர் சிங்காரவேலன், மாநில துணை தலைவர் ஜோதிபாசு, புதுச்சேரி பிரதேச செயலாளர் ஆனந்த், கடலூர் மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன், மாவட்ட துணை செயலாளர் தமிழ்மணி, துறைத்தலைவர் வினோத்குமார், துறை தலைவர் சதீஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் பரமசிவம், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×