என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் மாநகராட்சி துணை மேயர் அலுவலகத்தை திருமாவளவன் எம்.பி. திறந்து வைத்தார்
கடலூர் மாநகராட்சி துணை மேயர் அலுவலகம்- திருமாவளவன் எம்.பி. திறந்து வைத்தார்
கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் துணை மேயர் தாமரைச்செல்வனுக்கு, தனியாக அறை ஒதுக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது.
கடலூர்:
கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் துணை மேயர் தாமரைச்செல்வனுக்கு, தனியாக அறை ஒதுக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி, துணை மேயருக்கான அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
முன்னதாக துணை மேயர் தாமரைச்செல்வன் வரவேற்றார். இதில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, நகர தி.மு.க. செயலாளர் ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், மாநிலக்குழு பாரா.முரளி, நகர செயலாளர் செந்தில், கவுன்சிலர் சரிதா, அருள் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story