என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழாவில் மரக்கன்று நடப்பட்டபோது எடுத்த படம்.
ஆத்தூர் அருகே உலக பூமி பாதுகாப்பு தின விழா கொண்டாட்டம்
ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் கிராமத்தில் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் உலக பூமி பாதுகாப்பு தின விழா நடைபெற்றது.
ஆத்தூர்:

மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் பனை தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன தலைவருமான கென்னடி தலைமை தாங்கினார். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் பானுமதி முன்னிலை வகித்தார்.
தையல் பயிற்சி மாணவி மெபிலா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மாவட்ட அதிகாரி ரதிதேவி கருத்துரை வழங்கினார்.
தையல் பயிற்சி மாணவி ரிபான்சி நன்றி கூறினார். கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தாமிரபரணி ஆற்றுகரையோரங்களிலும், கடற்கரை பகுதிகளிலும் பறவைகளின் உணவுக்கு பயன்படும் பழ வகை மரக்கன்றுகள் 100 நடப்பட்டது.
இதில் தையல் பயிற்சி மாணவிகள், வளர் இளம் பெண்கள், மகளிர் சுய உதவி குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மதர் சமூக சேவை நிறுவனம் மற்றும் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில் செய்திருந்தனர்.

Next Story