என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல் - 2 பேர் பலி

    தஞ்சை அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
    வல்லம்:

    திருச்சி மாவட்டம் வாழவந்தான் கோட்டையை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 38). இவர் துவாக்குடி பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். 

    இவர் தஞ்சையில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் உதயநிதி (17) என்பவருடன் துவாக்குடி நோக்கி சென்றுக் கொண்டி-ருந்தார். அப்போது நவலூர் பிரிவு

    சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டிப்பர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ராஜேஷ், உதயநிதி இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.தகவலறிந்த

    செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    Next Story
    ×