என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெற்றது.
    X
    பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெற்றது.

    பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் தெப்பத்திருவிழா

    திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவில் மலர் வணிக வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தினரால் தெப்பத்திருவிழா

    நடைபெற்றது.மாலை சுவாமி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை, தொடர்ந்து கல்யாணசுந்தர சுவாமி திருமணக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நிறைவு பெற்று கோவில் எதிர்புறம்

    உள்ள குளத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான தெப்பத்தில் அமர்ந்து அருள் பாலிக்கும் காட்சி நடைபெற்றது.இதில் கோவில் உள் கலை அரங்கில் மலர் வணிக வியாபாரிகள்

    மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தால் மாபெரும் பரத நாட்டிய கலை நிகழ்ச்சியும், திண்டுக்கல் மாற்றுத்திறனாளி குட்டி ராஜா குழுவினரின் சிறப்பு நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.நிகழ்ச்சிகளில்

    ஏராளமான பொதுமக்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை மலர் வணிகர் சங்க தலைவர் காளிதாஸ், செயலாளர் சாமிநாதன், பொருளாளர் செல்வகணபதி, துணைத்

    தலைவர் குமார், துணை செயலாளர் சிம்பு மற்றும் சங்க மூத்த உறுப்பினர்கள் மற்றும் கோவில் செயல் அலுவலர் ராஜா, கணக்கர் சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×