என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலாவதியாகும்  நிலையில் உள்ள மருந்து.
    X
    காலாவதியாகும் நிலையில் உள்ள மருந்து.

    குமாரபாளையத்தில் காலாவதியாகும் மருந்து வினியோகம்

    குமாரபாளையத்தில் காலாவதியாகும் மருந்து வினியோகம் பொதுமக்கள் புகார் செய்தனர்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பழைய போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மாராக்கால் காடு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து வந்த நர்ஸ்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் மருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர்கள் பார்த்து ஏப்ரல்  மாதம் காலாவதியாகும் மருந்தை கொடுத்ததற்கு கடும் ஆட்சேபனை செய்தனர். 

    குறைந்தபட்சம் 6 மாத காலத்திற்கு பிறகு காலாவதியாகும் மருந்தை-யாவது கொடுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  இது குறித்து வட்டார மேற்பார்வையாளர் பாலு கூறுகையில்,  இது போல் நடக்காதிருக்க  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    Next Story
    ×