என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முகாம்
    X
    முகாம்

    விழுப்புரத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

    விழுப்புரம் நகர பகுதியான கா.குப்பம் பகுதியில் இன்று கோமாரி நோய்த்தடுப்பு ஊசி முகாமை தொடங்கி வைத்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட கா.குப்பத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் வராமல் தடுக்கும் நோக்கத்துடன் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முகாம் நடத்தப்படுகிறது. இதேபோல் நகரப்பகுதியிலும் முகாம்கள் நடக்க கலெக்டர் மோகன் அறிவுறுத்தியிருந்தார்.

    அதனடிப்படையில் விழுப்புரம் நகர பகுதியான கா.குப்பம் பகுதியில் இன்று கோமாரி நோய்த்தடுப்பு ஊசி முகாமை தொடங்கி வைத்தார். அவருடன் விழுப்புரம் நகரசபை தலைவர் தமிழ்ச்செல்வி, நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா ஆகியோர் உடன் இருந்தனர். முகாமில் நூற்றுக்கணக்கான கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    பின்னர் அந்த பகுதியில் அமைந்துள்ள அய்யனாரப்பன் கோவிலுக்குச் சென்று கலெக்டர் வழிபட்டார். அதனைத் தொடர்ந்து கோவிலுக்கு சொந்தமான குளத்தை பார்வையிட்டு அதனை உடனடியாக சீர் அமைப்பதற்கான உத்தரவுகளையும் பிறப்பித்தார்.

    Next Story
    ×