என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைகோ
    X
    வைகோ

    ம.தி.மு.க. கட்சி சார்பில் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்கள் நியமனம்- வைகோ அறிவிப்பு

    ம.தி.மு.க. கட்சி சார்பில் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்று வைகோ அறிவித்துள்ளார்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ம.தி.மு.க. கட்சி சார்பில் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

    1. இளவழகன் (தென்சென்னை மேற்கு மாவட்ட அவைத் தலைவர்).

    2. வழக்கறிஞர் கே.வி.மோகனசுந்தரம் (கடலூர் தெற்கு மாவட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர்).

    3. கோவை பெ.செல்வராஜ் (கோவை மாநகர் மாவட்டத் துணைச் செயலாளர்).

    4. மதுரை எஸ்.மகபூப்ஜான், (மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி இணைப் பொதுச்செயலாளர்).

    5. வழக்கறிஞர் ரா.செந்தில்செல்வன், (தேர்தல் பணி துணைச் செயலாளர்).

    பட்டுத்துறை மாரிச்சாமி ம.தி.மு.க.வின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், சி.எஸ்.சிமியோன்ராஜ் சொத்துப் பாதுகாப்பு குழு உறுப்பினராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்... உயரும் பெட்ரோல், டீசல் விலை: போலி எரிபொருள் தயாரித்த 2 பேர் கைது

    Next Story
    ×