என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    சாராயம் விற்ற 7 பேர் கைது

    நன்னிலம் அருகே சாராயம் விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது சிறுபுலியூர் வடக்கு தெருவை சேர்ந்த ராஜா (வயது 42) என்பவர் தனது வீட்டுக்கு பின்பக்கத்தில், புதுவை மாநில சாராயம் 60 லிட்டரை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முற்பட்டார். 

    இதனை அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று ராஜாவை கைது செய்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் நாடாகுடி மெயின் ரோடு சுந்தர் (56), பண்ணை நல்லூர் சிவன் கோயில் தெரு ரவி (56), கூத்தனூர் மேலத்தெரு முருகதாஸ் (46), 

    பண்ணை நல்லூர் மாரியம்மன் கோயில் தெரு தினேஷ் (29), கடகம்பாடி மேலத்தெரு செல்வம் (48) உள்பட 6 பேர் கள்ள சாராயம் விற்றதாக பேரளம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 7 பேர்

    கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

    Next Story
    ×