search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக சட்டசபை
    X
    தமிழக சட்டசபை

    ரூ.35,000 கோடியில் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம்- சட்டசபையில் தகவல்

    மாநிலம் முழுவதும் தற்போது நடைபெற்று வரும் 5 பெரிய PNG குழாய் அமைப்பு திட்டங்களின் அமலாக்கத்தை டிட்கோ கண்காணித்து வருவதாகவும் தொழிற்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சட்டசபையில் இன்று தொழிற்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் 2,785 விற்பனை நிலையங்களில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவும், 22,794,795 வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவும் வழங்கும் திட்டம் ரூ.35,000 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் என்று தொழிற்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெட்ரோலியம் - இயற்கை எரிவாயு குழாயமைப்பு திட்டத்தை எண்ணெய் நிறுவனங்களும், நகர எரிவாயு விநியோகத் திட்டத்தை மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களும் செயல்படுத்துவதை உறுதிபடுத்தும் முகமையாக செயல்பட டிட்கோ நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் தற்போது நடைபெற்று வரும் 5 பெரிய PNG குழாய் அமைப்பு திட்டங்களின் அமலாக்கத்தை டிட்கோ கண்காணித்து வருவதாகவும் தொழிற்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இயற்கை எரிவாயு குழாய் அமைப்பு திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் 1,224 கி.மீ., நீளத்துக்கும், கெயில் நிறுவனம் 319 கி.மீ., நீளத்துக்கும் செயல்படுத்தி வருவதாகவும், பெட்ரோலிய பொருட்களுக்கான குழாய் அமைப்பு திட்டத்தை பிறிசிலி நிறுவனம் 700 கி.மீ., நீளத்துக்கும், பாரத் பெட்ரோலிய கார்ப்பரேசன் லிட்., நிறுவனம் 320 கி.மீ., நீளத்துக்கும், கொச்சின் சேலம் பைப்லைன் பிரைவேட் லிட்., நிறுவனம் 210 கி.மீ., நீளத்துக்கும் செயல்படுத்தி வருவதாகவும், இதன் முதலீடு ரூ.14,200 கோடியாக உள்ளதாகவும் தொழிற்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நகர எரிவாயு விநியோகத் திட்டத்துக்கான வரைவு கொள்கையை, மாநில அளவில் டிட்கோ தயாரித்துள்ளதாகவும், நகர எரிவாயு விநியோக வலையமைப்பை, மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் செயல்படுத்த அனுமதி பெற்றுள்ள 7 CGD நிறுவனங்களுடன், டிட்கோ ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும், 2,785 விற்பனை நிலையங்களில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவும், 22,794,795 வீடுகளுக்கு குழாயின் மூலம் இயற்கை எரிவாயுவும் வழங்குவதற்கான இத்திட்டம், ரூ.35,000 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் என்றும், 8 ஆண்டுகளில் பணி நிறைவடையும் என்றும் தொழிற்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×