என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண் உடல் மீட்பு.
கிணற்றில் மிதந்த பெண் உடல்
திருமங்கலம் அருகே கிணற்றில் மிதந்த பெண் உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர்
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள தென்பழஞ்சியை சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மனைவி உமாமகேஸ்வரி (வயது 40). காலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர், அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் அங்குள்ள முத்தையா தோட்டம் கிணற்றில் உமாமகேஸ்வரி பிணமாக மிதப்பது தெரியவந்தது. இது குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து உடலை மீட்டனர். காலைக்கடன் கழிக்க சென்றபோது உமாமகேஸ்வரி கிணற்றில் தவறிவிழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து பூமிநாதன் கொடுத்த புகாரின்பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






