என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேர்வைகாரன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மனு அளித்த காட்சி.
சேர்வைகாரன்பட்டி ஊராட்சி பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க கோரி அமைச்சரிடம் பஞ்சாயத்து தலைவர் மனு
கடையம் ஊராட்சி ஒன்றியம் சேர்வைக்காரன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மனு அளித்தார்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் சேர்வைகாரன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரவிச் சந்திரன் சென்னை சென்று உணவு அமைச்சர் சக்கரபாணியை நேரில் சந்தித்து மனு ஒன்று கொடுத்தார்.
மனுவில் ஊராட்சிக்குட்பட்ட கேளையா பிள்ளையூர் மற்றும் அங்கப்புரம் பகுதிகளில் பொதுமக்களின் நலன் கருதி புதிய ரேசன் கடை அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கொடுத்த மனுவில், கடையம் துணை மின் நிலைய டிரான்ஸ்பார்மர்கள் அடிக்கடி பழுதாவதால், இப்பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் கட்டேறிப் பட்டி துணை மின் நிலைய கட்டிட அலுவலகத்தை புதிதாக கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து அவர் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கொடுத்த மனுவில், கேளையாப்பிள்ளையூர், கட்டேறிப்பட்டி, செக்கடியூர் பகுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

Next Story