என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    வருகிற 21, 25-ந்தேதிகளில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்

    பொதுக்குழு உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணை திருத்தி அமைக்கப்பட்டு முதல்கட்டத் தேர்தல் வருகிற 21-ந்தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் 25-ந்தேதியும் நடைபெறும்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. சட்ட திட்ட விதிமுறைகளின்படி, பகுதி-4 மாவட்டக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணை திருத்தி அமைக்கப்பட்டு முதல்கட்டத் தேர்தல் வருகிற 21-ந்தேதியும் (வியாழக்கிழமை), இரண்டாம் கட்டத் தேர்தல் 25-ந்தேதியும் (திங்கட்கிழமை) நடைபெறும்.

    மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., எம்.ஜாபர் அலி-வடசென்னை வடக்கு (கிழக்கு), கே.ஏ.ஜெயபால், பி.கே.வைரமுத்து-வடசென்னை வடக்கு (மேற்கு), கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., சி.த.செல்லப்பாண்டியன்- வட சென்னை தெற்கு (மேற்கு), எஸ்.பி.சண்முகநாதன், என்.சின்னத்துரை- தென் சென்னை வடக்கு (மேற்கு), எம்.ஜி..எம். சுப்ரமணியன், பி.என்.ராமச்சந்திரன்-தென்சென்னை தெற்கு (கிழக்கு), வி.எஸ்.சேதுராமன், எஸ்.வி.திருஞான சம்பந்தம்- தென் சென்னை தெற்கு (மேற்கு).

    நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ., ஆர்.வி. என்.கண்ணன், ஏ.சுப்புரத்தினம்-சென்னை புறநகர், எம்.சி. சம்பத், பி.எஸ்.அருள்-திருவள்ளூர் கிழக்கு, என்.தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., கே.டி.பச்சைமால், எஸ்.ஏ.அசோகன், டி.ஜான்தங்கம்- திருவள்ளூர் மத்தியம்.

    மாவட்ட, மாநில தேர்தல் பொறுப்பாளர்கள், தேர்தல்களை நடத்தி முடித்து வெற்றிப் படிவத்தில் பொறுப்பாளர்கள் கையொப்பம் இட்டு, வெற்றிப் படிவம், ரசீதுப் புத்தகம், விண்ணப்பக் கட்டணம் முதலானவற்றை தேர்தல் முடிவுற்ற 3 நாட்களுக்குள் மாவட்ட, மாநிலத் தேர்தல் பொறுப்பாளர்கள் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    கழக அமைப்புத் தேர்தல்களில் போட்டியிட விரும்பும் கழக உடன்பிறப்புகள் விருப்ப மனு விண்ணப்ப கட்டணங்களை, சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு மற்றும் மாநிலங்களுக்கு அறிவிக்கப்படும் தேர்தல் பொறுப்பாளர்களிடம் செலுத்தி, அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    மாவட்டக் கழக செயலாளர்- ரூ.25 ஆயிரம், மாவட்ட அவைத் தலைவர், இணைச் செயலாளர், துணை செயலாளர்கள், பொருளாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள்-5 ஆயிரம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×