என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழையில் நனைந்த நெல் மூட்டைகளை படத்தில் காணலாம்.
    X
    மழையில் நனைந்த நெல் மூட்டைகளை படத்தில் காணலாம்.

    சாணார்பட்டி பகுதியில் மழையில் நனைந்து வீணாகும் நெல்மணிகள்

    சாணார்பட்டி பகுதியில் மழையில் நனைந்த நெல்மணிகள் வீணாகி வருகின்றன.
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகில் உள்ள தேத்தாம்பட்டி, மருநூத்து, சாமிநாதபுரம், புதுஆவிளிபட்டி, கோம்பைபட்டி, புகையிலைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு நெல் விவசாயம் நடைபெற்று வந்தது.

    அதன் பிறகு போதிய மழை பெய்யாததால் நெல் விவசாயத்தை அவர்கள் கைவிட்டனர். கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் 10 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதி விவசாயிகள் எம்.45, கல்சர் பொன்னி, செல்வபொன்னி, அம்மன் ஆகிய நெல் ரகங்களை பயிரிட்டனர்.
     
    தற்போது பெரும்பாலான வயல்களில் அறுவடைக்கு தயார் நிலையிலும் ஒருசில இடங்களில் அறுவடை செய்தும் விவசாயிகள் வைத்துள்ளனர். இப்பகுதியில் கூலி ஆட்கள் பற்றாக்குறையால் தங்கள் குடும்பத்தினரே அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் அறுவடைசெய்த நெல்மணிகள் உலர் களத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மழை காரணமாக அதனையும் பாதுகாக்க முடியவில்லை.

    இதனால் நெல்மணிகள் முளைத்து வருகின்றன. சாணார்பட்டி, கோபால்பட்டி, நத்தம் ஆகிய பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லை. இப்பகுதி விவசாயிகள் திண்டுக்கல்லுக்கு நெல்லை விற்பனைக்கு கொண்டுசென்று வந்தனர்.

    தற்போது பெய்து வரும் மழையினால் நெல்லை கொள்முதல் செய்ய முடியாத நிலை உள்ளதால் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×