என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலைமறியலில் ஈடுபட்ட உறவினர்களை படத்தில் காணலாம்.
    X
    சாலைமறியலில் ஈடுபட்ட உறவினர்களை படத்தில் காணலாம்.

    வேளாண் அதிகாரியை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மறியல்

    வேளாண் அதிகாரியை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை சேர்ந்தவர் ராஜவேலன் (வயது 42). இவர் சாத்தான்குளத்தில் வேளாண் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி செல்வலட்சுமி (36). இவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர்களுக்கு 12 மற்றும் 6 வயதில் 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 16ம் தேதி காதணிவிழா நடைபெற்றது. இதற்காக செல்வலட்சுமியின் உறவினர்களுக்கு முறையான தகவல் அளிக்கவில்லை என்றும், அவர்களை சரியாக உபசரிக்கவில்லை என்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதனால் செல்வலட்சுமி நேற்று இரவு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக ராஜவேலன் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். செல்வலட்சுமி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்-சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அவரைப் பார்க்க செல்வலட்சுமியின் உறவி-னர்கள் இன்று திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் செல்வ-லட்சுமியின் முகத்தில் காயங்கள் இருப்பதாகவும், அவரை கணவர், மாமனார் குருசாமி, மாமியார் ரஞ்சிதம் ஆகியோர் தற்கொலைக்கு தூண்டியுள்ளனர்.

    எனவே அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அரசு ஆஸ்பத்திரி முன்பு தரையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்-படுத்தினர். இதனையடுத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அவர்கள் கூட்டமாக வந்து மனு அளித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×