என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
கொதிக்கும் சாம்பார் கொட்டி 1 வயது குழந்தை உடல் வெந்தது
சேலத்தில் கொதிக்கும் சாம்பார் கொட்டி 1 வயது குழந்தை உடல் வெந்தது. அந்த குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
சேலம் அழகாபுரம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மனைவி சுதா (வயது 24). இவர் நேற்று மதியம் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது கொதிக்கும் சாம்பாரை அடுப்பில் இருந்து இறக்கும் போது கை தவறி கீழே விழுந்தது. எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த இந்த தம்பதிகளின் 1 வயது குழந்தை ஹாசினியின் மீது சாம்பார் கொட்டியது.
இதில் குழந்தையின் முகம், தோள்பட்டை போன்ற பகுதிகளில் காயம் அடைந்தது. உடனடியாக ஹாசினியை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story






