என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தூய்மைபணியாளர்கள்.
    X
    தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தூய்மைபணியாளர்கள்.

    நெல்லை அரசு மருத்துவமனை குப்பை கிடங்கில் ‘திடீர்’ தீ

    நெல்லை அரசு மருத்துவமனை குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
    நெல்லை:

    நெல்லை அரசு மருத்துவமனையில் தினந்தோறும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.

    மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பைகள் அங்குள்ள மகப்பேறு வார்டு அருகே கொட்டப்பட்டு வருகிறது.

    அங்கிருந்து மக்கும், மக்காத குப்பைகள், மருத்துவ கழிவுகள் என தனித்தனியாக பிரித்து அனுப்பப்படும். மக்கும் குப்பைகள் மட்டும் அங்கு கொட்டப்பட்டு இருக்கும்.

    இந்நிலையில் அந்த மக்கும் குப்பையில் இன்று திடீரென தீப்பிடித்தது. இதனால் புகைமூட்டம் காணப்பட்டது.

    இதையறிந்த அதன் அருகில் இருந்த பெரியார்நகர் பொதுமக்கள் மாநகராட்சி மேயருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக மேயர் சரவணன் உத்தரவின் பேரில் மருத்துவமனை தூய்மைப்பணியாளர்கள் 50&க்கும் மேற்பட்டோர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது.

    இதுதொடர்பாக தூய்மைப்பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் கூறும்போது, மக்கும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ள இடத்தில் இன்று திடீரென தீப்பிடித்துள்ளது. அந்த தீ தற்போது முழுவதும் அணைக்-கப்பட்டுள்ளது.

    தீ எப்படி பிடித்தது? என்று தெரிய-வில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.
    Next Story
    ×