search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து, ஒரு சவரன் ரூ.40,048-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்றம் காணப்பட்டு வந்தது. நேற்று தங்கம் பவுன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது.

    நேற்று பவுனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.40 ஆயிரத்து 96-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்தை கடந்தது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.48 குறைந்து ரூ.40 ஆயிரத்து 48-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 6-க்கு விற்பனையானது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.200 சரிந்து ரூ.74 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.40-க்கு விற்றது.
    Next Story
    ×