என் மலர்
உள்ளூர் செய்திகள்

முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.
98 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
வாராப்பூர் ஊராட்சியில் 98 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சி மின்னமலைப்பட்டி கிராமத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் 98 பயனாளிகளுக்கு ரூ.16.23 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும், 33 பயனாளிகளுக்கு மாவட்ட நுகர்பொருள் வழங்கல் துறையின் சார்பில் புதிய மின்னணு குடும்ப அட்டையினையும், 6 பயனாளிகளுக்கு தோட்டக்கலைத்துறையின் சார்பில் காப்பீட்டு ஆணையினையும் கலெக்டர் வழங்கினார்.
அவர் பேசுகையில், மின்னமலைப்பட்டி கிராம மக்களின் கோரிக்கையான சாலை வசதி, பேருந்து வசதி போன்றவற்றை நிறைவேற்றவும், இதர வசதிகளை மேற்கொள்ளவும் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மக்கள் தொடர்பு முகாமின் நோக்கம், பொதுமக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதுடன், ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், முதலமைச்சர் செயல்படுத்திய திட்டமான மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் மருத்துவ வசதிகள் தேவைப்படுபவர்களுக்கு வீடுதேடிச்சென்று மருத்துவச் சிகிச்சை வழங்கப்படுகிறது. அதேபோல், கலைஞர் வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் 5 துறைகள் ஒருங்கிணைந்து, விவசாயிகளுக்கு தேவையான திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதுடன், விவசாயிகள் வேளாண்மைப்பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, பணிகள் துவங்கும் முன் கூட்டுறவுத்துறையின் மூலம் முன்பயிர்க்கடன் வழங்கப்படுகின்றது.
இதுபோல் பல்வேறு துறைகள் மூலமாகவும் எண்ணற்ற திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக வேளாண் மைத்துறை, பொது சுகாதாரத்துறை, தோட்டக்கலைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துறை ஆகிய துறைகள் மூலம் பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையிலான கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தததை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித்தலைவர் பொன்.மணிபாஸ்கரன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயாகுமரன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ராம்கணேஷ், தனித்துணை ஆட்சியர் காமாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சின்னம்மாள் மென்னன், ஊராட்சி மன்றத்தலைவர் அழகம்மாள் பழனிச்சாமி, வட்டாட்சியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






