என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன்.
    X
    பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன்.

    64 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி - கலெக்டர் வழங்கல்

    திருவாரூர் அருகே நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 64 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் வழங்கினார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா தென்காரவயல் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

    இம்முகாமில் தென்காரவயல், வடகாரவயல், காணுர், பெரம்பூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து-கொண்டு தங்களது மனுக்--களை கலெக்டரிடம் அளித்தனர்.

    அப்போது கலெக்டர் கூறியதாவது:

     மக்கள் நேர்காணல் முகாம் என்பது மக்களை தேடி அலுவலர்கள் நேரடியாக தங்களது கிராமத்-திற்கே வந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று 

    அதற்குண்டான தீர்வுகளை அளிப்பதாகும். அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் இம்முகாமில் கலந்து கொண்டு தங்கள் துறை தொடர்பான தமிழகஅரசு செயல்படுத்திவரும் திட்டங்களையெல்லாம்
     
    எடுத்துரைத்திருப்பார்கள். பொதுமக்கள் திட்டங்களைப்பற்றி அறிந்து திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.  இதையடுத்து வருவாய்த்துறை

    சார்பில் 49 பயனாளி-களுக்கு ரூ.77ஆயிரம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேளாண்மைத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு
     
    இடுபொருட்கள் மற்றும் உயிர் உரம், தோட்டக்க-லைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு மாங்கன்று, கொய்யாகன்று, வீட்டு-காய்-கறிவிதை, மல்லி-கைகன்று, எலுமிச்சைகன்று ஆகிய நலத்திட்ட

     உதவிகளை மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் நீடாமங்கலம் ஒன்றியக்குழுத் தலைவர் சோம.செந்தமிழ்-செல்வன், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர்

    அழகிரிசாமி, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமைதிட்ட இயக்குநர் தெய்வநாயகி, கூட்டுறவு-சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, நீடாமங்கலம் வட்டாட்சியர் ஷீலா, உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள்மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×