என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுடன் சிலம்பாட்ட நிர்வாகிகள் உள்ளனர்.
சிலம்பாட்ட போட்டி
காரைக்குடியில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி நடந்தது.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 40வது மாநில அளவிலான சப்-ஜூனியர் மற்றும் சீனியர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சிலம்பாட்ட போட்டிகள் 3நாட்கள் நடந்தன.
இதில் வீரர்கள் 350 பேரும், வீராங்கனைகள் 290பேரும் கலந்து கொண்டனர். தொடக்கவிழாவில் மாநில பொதுச்செயலாளர் முரளி கிருஷ்ணா வரவேற்றார். இந்திய சிலம்ப சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு சிலம்பாட்ட கழக தலைவர் ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். தலைமையேற்று அணிவகுப்பை பார்வையிட்டார்.
அவர் பேசுகையில், சிலம்பாட்ட போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு கல்ல்லூரிகளில் மற்றும் வேலைவாய்ப்புகளில் 3சதவீத இட ஒதுக்கீடு பெறுவதற்கு வழங்கப்படும் சான்றிதழ் முக்கியமானதாகும். விரைவில் சிலம்பாட்ட புரோலீக் போட்டிகள் நடத்தப்படும் என்றார்.
பல்வேறு பிரிவு போட்டிகளை ஊரக வளச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி, நகர்மன்ற தலைவர் முத்துதுரை, துணைத்-தலைவர் குணசேகரன் ஆகியோர் தெடங்கி வைத்தனர். இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை திருவள்ளூர் மாவட்டமும் 2ம் இடத்தை புதுக்கோட்டை மாவட்டமும், 3ம் இடத்தை தஞ்சாவூர் மாவட்டமும் வென்றன.
பரிசளிப்பு விழாவில் மாவட்ட தலைவர் டாக்டர் பிரபு தலைமை வகித்தார். தொழிலதிபர் படிக்காசு, முன்னாள் எம்.எல்.ஏ துரைராஜ், தமிழ்மாநில காங்கிரஸ் மாநிலசெயலாளர் துரை கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினர்.
சிலம்பாட்டக்கழக நிர்வாகிகள், போட்டிகளின் இயக்குநர்கள், நடுவர்கள், தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட செயலாளர் வினோத்குமார் நன்றி கூறினார்.
Next Story






