என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேச்சுப்போட்டி
அம்பேத்கார் பிறந்தநாள்
அம்பேத்கார் பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி 19-ந் தேதி நடக்கிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டகலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2022ம் ஆண்டில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 19ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சிவகங்கை, மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ள “சிவகங்கை புத்தகத் திருவிழா&2022” நிகழ்விற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அரங்கத்தில் கலெக்டரின் ஆணைக்கிணங்க பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு (அரசு விதிமுறைகளின்படியும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும்) தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன.
மாவட்டஅளவில் நடைபெறும் இந்தபோட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி-களுக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.5ஆயிரம், 2ம் பரிசாக ரூ.3ஆயிரம், 3ம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.
அத்துடன் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் இருவரை மட்டும் தேர்வு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது.
பள்ளி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டி 19ந்தேதி காலை 9.30 மணியில் இருந்தும், கல்லூரி மாணாக்கர்களுக்கான போட்டி மதியம் 1.30 மணியில் இருந்தும் நடைபெறும்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மட்டும் இந்த பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கலாம். பள்ளி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டியில் மாவட்டத்தில் இருந்து மொத்தம் 30 மாணாக்கர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
இதுதொடர்பில், கீழ்நிலை அளவில் முதன்-மைக்கல்வி அலுவலரால் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு மாவட்ட அளவில் நடைபெறும் இந்த போட்டிக்கு 30பேர் கொண்ட மாணாக்கர்பட்டியல் முதன்மைக்கல்வி அலுவலரால் போட்டிக்கு பரிந்துரைக்கப்படவுள்ளது.
எனவே, பள்ளி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணாக்கர்கள் உரிய வட்டாரக் கல்வி அலுவலர்களையோ, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரையோ தொடர்பு கொள்ளலாம்.
கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டியில் ஒரு கல்லூரியில் இருந்து இருவர் மட்டுமே பங்கேற்க முடியும். இது தொடர்பில் சிவகங்கை மாவட்டத்தில் செயற்பட்டு வரும் அனைத்துக் கல்லூரிகளின் (அரசு மற்றும் தனியார் கல்லூரிகள்) முதல்வர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறையில் இருந்து சுற்றறிக்கையும் போட்டியில் பங்கேற்பதற்கான படிவம் மற்றும் விதிமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






