search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

    ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்- மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை

    தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக முதல்-அமைச்சர் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்என்று கேட்டுக்கொள்கிறோம்.

    சென்னை:

    தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரிய செவிலியர்கள் மேம்பட்டு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள 424 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 செவிலியர் பணியிடங்களில் இரண்டு பணியிடம் மட்டுமே நிரந்தர பணியிடமாகவும் மீதமுள்ள 8 பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகின்றது, மேலும் 1870 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 4 செவிலியர் பணியிடங்கள் உள்ள நிலையில் அதில் ஒரு பணியிடம் கூட நிரந்தர பணியிடமாக இல்லை. அனைத்து பணியிடங்களும் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகின்றன.

    இந்திய பொது சுகாதார தரநிலை பரிந்துரைகளின்படி தமிழ்நாடு அரசு புதிய செவிலியர் பணியிடங்களை உருவாக்குவதுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தர பணியிடங்கள் உருவாக்கினால் ஒப்பந்த முறையில் பணிசெய்யும் செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய முடியும்.

    மேலும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் மக்களுக்கு இன்னும் தரமான மருத்துவ சேவையை தமிழ்நாடு அரசால் வழங்க முடியும்.

    கடந்த 2006 ஆம் ஆண்டு இது போன்று ஒப்பந்த முறையில் பணி செய்த செவிலியர்கள் அனைவரையும் டாக்டர் கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஒரே நேரத்தில் அந்தந்த பணியிடத்திலேயே பணி நிரந்தரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. தேர்தல் வாக்குறுதி 356-ல் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதியளிக்கப்பட்டது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக முதல்-அமைச்சர் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்என்று கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்... எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காலம் நீட்டிப்பு

    Next Story
    ×