search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் கேஎன் நேரு
    X
    அமைச்சர் கேஎன் நேரு

    மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி ரூ.7ஆயிரத்து 600 கோடி- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

    மத்திய அரசின் நிதி பெற ஏற்கனவே வரிகளை உயர்த்தி பிற மாநிலங்கள் தகுதிபெற்றுவிட்டன. இந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    திருச்சி:

    தமிழக நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ்நிலையம் அமையும் பகுதியினை இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது,

    1987-ல் அ.தி.மு.க. ஆட்சியில் கிராமப்புறங்களில் 100 சதவீதம், நகரங்களில் 200 சதவீதம், தொழிற்சாலைகளுக்கு 300 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது. மீண்டும் 1993-ல் அவர்களின் ஆட்சியில் 100,150, 250 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது. ஆனால் 1998-ல் தி.மு.க. ஆட்சியில் 50,75,125 என்ற விகிதத்தில்தான் வரி உயர்த்தப்பட்டது.

    இப்போது கோவையில் 600 சதுரஅடி வீட்டுக்கு ரூ. 2000 வரிவிதிக்கப்பட்டு இருக்கிறது என்றால் பூனாவில் ரூ. 6000, ரூ. 7000 செலுத்த வேண்டும். மத்திய அரசிடம் இருந்து நமக்கு ரூ. 7 ஆயிரத்து 600 கோடி நிதி பாக்கி வர வேண்டியுள்ளது. நடப்பு ஆண்டில் ரூ. 15 ஆயிரம் கோடி அவர்கள் தர வேண்டும். மத்திய அரசின் நிதி பெற ஏற்கனவே வரிகளை உயர்த்தி பிற மாநிலங்கள் தகுதிபெற்றுவிட்டன. இந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    இதையும் படியுங்கள்... மாணவிகள் மது குடிக்கும் அளவுக்கு தி.மு.க. ஆட்சியில் சமுதாய சீரழிவு நடக்கிறது- ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு

    Next Story
    ×