என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனு
முன்னாள் படைவீரர்கள் கோரிக்கை மனுக்கள் வழங்கலாம்- கடலூர் கலெக்டர் அறிவிப்பு
சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் வேலைவாய்ப்பு கருத்தரங்கு வருகிற 19-ந்தேதி காலை10 மணிக்கு கலெக்டர் தலைமையில் மாவட்டகலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தில் நடத்தப்படவுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் வேலைவாய்ப்பு கருத்தரங்கு வருகிற 19-ந்தேதி காலை10 மணிக்கு கலெக்டர் தலைமையில் மாவட்டகலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தில் நடத்தப்படவுள்ளது.
மேலும் முன்னாள் படை வீரர்கள் சுய தொழில் செய்திட ஊக்குவிக்கும் வகையில் கருத்தரங்கில் பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறை மூலம் வழங்கப்படுகின்ற பயிற்சி மற்றும் சலுகைகள் குறித்து விரிவுரையாற்றவுள்ளனர். இத்தொழில் முனைவோர் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயனடையலாம்.
முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர் மற்றும் அவர் தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரிபவர்களின் சார்ந்தோர்கள் தங்களது கோரிக்கையினை மனுவாக கலெக்டரிடம் அன்றைய தினம் நேரில் சமர்ப்பிக்கலாம். மேலும் மனுக்கள் அளிக்க விரும்புவோர் மனுவின் இரு பிரதிகளை அடையாள அட்டை நகலுடன் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Next Story