என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    பள்ளி மாணவி பலாத்காரம்- வாலிபர் போக்சோவில் கைது

    ஆம்பூர் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த ஷூ கம்பெனி தொழிலாளிக்கு 15 வயது மகள் உள்ளார். அந்த பெண் ஆம்பூர் அருகே உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 23) என்பவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து பெண்ணின் தாய் உம்ராபாத் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை பலாத்காரம் செய்த அருண்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    Next Story
    ×