search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அபராதம்
    X
    அபராதம்

    கடையம் அருகே தேக்குமரம் வெட்டி விற்றவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்

    கடையம் அருகே தேக்குமரம் வெட்டி விற்றவருக்கு ரூ.2 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.

    கடையம்:

    களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை வனக்கோட்டம் கடையம் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தேக்கு மரங்கள் உள்ளனர்.

    இங்கு மலையடிவாரத்தில் அம்பையை அடுத்த ஆம்பூர் தாட்டான்பட்டியை சேர்ந்த பரமசிவம் என்பவர் செங்கல் சூளை வைத்துள்ளார். அவர் தேக்கு மரங்களை இருவேறு இடங்களில் திருட்டுதனமாக வெட்டி கொண்டு செல்வதாக கடையம் வன அலுவலகத்திறகு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தனி குழுவாக கடையம் வனச்சரக பயிற்சி உதவி வனப்பாதுகாவலர் ராதை தலைமையில் வனவர் முருகசாமி, வனக்காப்பாளர் மணி, ராஜசுப்ரியா மற்றும் களப்பணியாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை செய்தனர்.

    அப்போது தேக்கு மரங்களை எவ்வித ஆவணமும் இன்றி அத்துமீறி வெட்டி விற்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து பரமசிவம் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    மேலும் துணை இயக்குனர் செண்பக பிரியா உத்தரவின்படி ரூ.2 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.

    Next Story
    ×