search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திண்டுக்கல்லில் வெங்காயம், இஞ்சி விலை உயர்வு.

    திண்டுக்கல்லில் ரம்ஜான் நோன்பு தொடங்கியுள்ள நிலையில் வெங்காயம் மற்றும் இஞ்சி விலை சற்று உயர்ந்துள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் தக்காளியைத் தொடர்ந்து வெங்காயமும் கடும் வீழ்ச்சியடைந்தது. 1 கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையானது. தெருக்களில் வண்டிகளில் கொண்டு வந்து கூவி கூவி வெங்காயத்தை விற்று வந்தனர். போதிய விலை கிடைக்காத நிலையில் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்தனர்.

    இந்நிலையில் நேற்று ரம்ஜான் நோன்பு தொடங்கியதால் கஞ்சி தயாரிக்க வெங்காயம் தேவை அதிகரித்தது. இதனால் இதன் விற்பனையும் வழக்கத்தை விட அதிகரித்தது. இன்று திண்டுக்கல் உழவர் சந்தையில் 1 கிலோ வெங் காயம் ரூ.24க்கு விற்பனையானது.

    இதே போல நோன்பு கஞ்சி தயாரிக்க பயன்படுத் தப்படும்  இஞ்சியும் 1 கிலோ ரூ.44க்கு விற்பனையானது. மேலும் கொத்தமல்லி, புதினா இலைகளின் விலையும் சற்று உயர்ந்தது.

    இனி வரும் நாட்களில் வெங்காயம் உள்பட சில முக்கிய காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கோடை காலம் தொடங்கியது முதலே எலுமிச்சையின் தேவையும் அதிகரிக்க தொடங்கியது. திண்டுக்கல்லில் சிறுமலை உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து எலுமிச்சை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    தேவை அதிகரிப்பால் எலுமிச்சை விலை கடும் உச்சத்தை அடைந்துள்ளது. மே மாதம் வரை இந்த விலை உயர்வு இருக்கும் என்பதால் எலுமிச்சை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.
    Next Story
    ×