search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

    அமெரிக்கா, தென்கொரியாவுக்கு மு.க.ஸ்டாலின் விரைவில் பயணம்- அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு செல்ல இருக்கிறார்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் 4 நாள் அரசு முறை பயணமாக துபாய், அபுதாபி, அமீரக நாடுகளுக்கு சென்று திரும்பினார். அவரது சுற்றுப்பயணத்தின் மூலம் பல நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு செல்ல இருக்கிறார். இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-

    அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளன. அவரது அடுத்த கட்ட சுற்றுப் பயணம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை விழுப்புரம் செல்கிறார்

    Next Story
    ×