என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கூட்டத்தில் பீட்டர் அல்போன்ஸ் பேசிய காட்சி.
காங்கிரஸ் கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும்-பீட்டர் அல்போன்ஸ் பேச்சு
By
மாலை மலர்2 April 2022 9:55 AM GMT (Updated: 2 April 2022 9:55 AM GMT)

நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பாக செயல்பட்டு காங்கிரஸ் கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும் என நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் பீட்டர் அல்போன்ஸ் பேசினார்.
நெல்லை:
நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத் தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
இதில் தமிழக சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-
ஆரம்ப காலத்தில் காங் கிரஸ் கட்சியை வளர்க்க தீவிரமாக பாடுபட்டோம். அப்போது நெல்லை மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. அந்த கட்டிடத்திற்கு மின் கட்டணம் செலுத்தக்கூட முடியால் அவதிப்பட்டோம்.
பின்னர் வாரந்தோறும் பொதுக்கூட்டங்கள் நடத்தி, நிதி திரட்டினோம். அதன் மூலம் ரூ.17 லட்சம் மதிப்பில் தற்போதைய மாவட்ட அலுவலகத்தை வாங் கினோம். ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் தற்போது உயர் பொறுப்பில் உள்ளனர்.
இந்த கட்டிடத்தில் உள்ள ஒவ்வொரு செங்கலிலும் காங்கிரசாரின் முகங்கள் உள்ளது. கடும் பாடுபட்டு கட்சியை வளர்க்க வேண்டும். நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பாக செயல்பட்டு காங்கிரசை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×