search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    X
    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மாணவி தற்கொலைக்கு நீதிகேட்டு போராட்டம்

    நாகை சர் ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவி சுபாஷனி தற்கொலைக்கு நீதிகேட்டு தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்த சர் ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவி  சுபாஷினி உயிர் இழப்புக்கு நீதி கேட்டு நாகை, நாகூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உறவினர்கள், இளைஞர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் சர் ஐசக் நியூட்டன் கல்லூரி நிர்வாகத்தினரை கைது செய்ய வலியுறுத்தி நாகூரில் இளைஞர் அமைப்பினர் சார்பில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
    ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு காவல்துறையை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து நாகூர் நாகை தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சாலை நடுவே சாமியானா பந்தல் போட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    அப்போது இன்ஸ் பெக்டர்கள் நாகூர் சிவராமன், கீழ்வேளூர் சோமசுந்தரம் ஆகியோர் சாலையில் சாமியான பந்தல் அமைக்க கூடாது என பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், இளைஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

    அப்போது சில இளைஞர்கள் காவல்துறையினரை மீறி சாலையில் மேலும் ஒரு சாமியான பந்தலை அமைத்தனர் தொடர்ந்து அங்கிருந்து நாகூர் காவல் நிலையத்தை முற்றுகையிட போராட்டக் காரர்கள் ஊர்வலமாக சென்றனர்.
    அவர்களை போலீசார் நடு வழியில் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் போராட்டத்தை கலைத்து அங்கிருந்து அவர்களை அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×