search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

    பல்லாவரம் மறைமலையடிகள் அரசு பள்ளி மாடர்ன் பள்ளியாகிறது- மு.க.ஸ்டாலின் 9-ந்தேதி பார்வையிடுகிறார்

    டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் அரசு உருவாக்கிய, இந்த மாதிரி பள்ளியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று பார்வையிட்டபோது கெஜ்ரிவாலும் உடன் சென்று பள்ளியின் சிறப்பம்சம் பற்றி எடுத்துக் கூறினார்.

    சென்னை:

    டெல்லி சென்றுள்ள முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அங்குள்ள அரசுப் பள்ளிக்கு சென்று பார்வையிட்டார்.

    அந்த பள்ளியில் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், தொழிற்முனைவோர் வகுப்பு, 'லேப்' உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளும் நவீனமாக உருவாக்கப்பட்டிருந்தது.

    டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் அரசு உருவாக்கிய, இந்த மாடர்ன் பள்ளியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று பார்வையிட்டபோது கெஜ்ரிவாலும் உடன் சென்று பள்ளியின் சிறப்பம்சம் பற்றி எடுத்துக் கூறினார்.

    அதன் பிறகு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்த போது, சென்னையிலும் மாடர்ன் பள்ளி தொடங்க முடிவு செய்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

    ஏற்கனவே பல்லாவரத்தில் உள்ள மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமீபத்தில்தான் ரூ.30 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் 'இளம் கலாம் அறிவியல் மையம்' திறக்கப்பட்டது.

    மாடர்ன் பள்ளியை உருவாக்கும் வகையில் இங்கு வகுப்பறைகளும் புதுப்பிக்கப்பட்டன. பள்ளிக்கு தேவையான பொருட்களும் நல்ல தரத்துடன் வாங்கி கொடுக்கப்பட்டன.

    மாடர்ன் பள்ளி அளவுக்கு இந்த பள்ளி உருவாக்கப்பட்டு வருவதால் இதனை மேலும் மேம்படுத்த என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கலாம் என்பது பற்றி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்துள்ளார்.

    இதற்காக வருகிற 9-ந்தேதி பல்லாவரம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அவர் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார்.

    இதையும் படியுங்கள்... தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு

    Next Story
    ×