search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்கால் திருப்பூர் மண்டலத்தில் ரூ.1கோடி இழப்பு

    பள்ளி, கல்லூரி செல்வோர், பணியாளர் சிரமத்தை கருத்தில் கொண்டு இரண்டாம் நாள் தொழிலாளர்கள் பலர் பணிக்கு திரும்பியதால் நிலைமை ஓரளவு சீரானது.
    திருப்பூர்:

    அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டத்தின் கீழ் திருப்பூர் மண்டலம் உள்ளது. தாராபுரம், பல்லடம், காங்கயம் உள்ளிட்ட 8 கிளைகள் உள்ளது. மாவட்டத்துக்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் என நாள் ஒன்றுக்கு 559 பஸ்கள் அதிகாலை முதல் இரவு வரை இயக்கப்படும். 

    கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த, 28, 29 ஆகிய தேதிகளில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்தன. முதல் நாள் 20 சதவீத பஸ்கள் மட்டுமே இயங்கின. பெரும்பாலான பஸ்கள் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள் அவதிப்பட்டனர்.

    பள்ளி, கல்லூரி செல்வோர், பணியாளர் சிரமத்தை கருத்தில் கொண்டு இரண்டாம் நாள் தொழிலாளர்கள் பலர் பணிக்கு திரும்பியதால் நிலைமை ஓரளவு சீரானது.அனைத்து பஸ்களும் இயங்கினால் திருப்பூர் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு 80 முதல் 90 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்படும். 

    வேலை நிறுத்தம் நடந்த இரு நாட்கள் 100 சதவீத பஸ் இயங்கியிருந்தால் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டப்பட்டிருக்கும். ஆனால் முதல் நாள் 80 சதவீதம், இரண்டாம் நாள் 40 சதவீதம் பஸ் இயங்காததால் ஒரு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து உயரதிகாரிகளுக்கு விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×