என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
மயிலாடும்பாறையில் கஞ்சா வியாபாரிகள் கைது
தேனி மாவட்டம் மயிலாடும்பாறையில் கஞ்சா பதுக்கி வைத்த 2 பேர் கைது
வருசநாடு:
தமிழகம் முழுவதும் ஆப்ரேசன் கஞ்சா 2.0 திட்டத்தின் கீழ் கஞ்சா வியாபாரிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி தேனி மாவட்டத்திலும் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
மயிலாடும்பாறை சப் இன்ஸ்பெக்டர் அருண்பாண்டி தலைமையிலான போலீசார் கோம்பைதொழு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள மலட்டுஓடை பகுதியில் கஞ்சாவுடன் நின்றுகொண்டிருந்த குணசேகரன் மனைவி ரஞ்சனி (வயது 32) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 1 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மற்றொரு பகுதியில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த பொன்னம்படுகையைச் சேர்ந்த ஈஸ்வரன் என்ற ஜெமினி (22) என்பவரை கைதுசெய்து அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் போலீசார் வருவதை அறிந்ததும் தப்பியோடிய முக்கிய குற்றவாளியான பாண்டி (42) என்பவரை தேடி வருகின்றனர்.
Next Story






