என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயில்
விருதுநகர்-காரைக்குடி ரெயிலை திருச்சி வரை நீட்டிக்க கோரிக்கை
விருதுநகர்-காரைக்குடி ரெயிலை திருச்சி வரை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாமதுரை,
சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, காரைக்குடி என 2 ஜங்சன் ரெயில் நிலையங்கள் உள்ளது.
கொரோனா காலத்தில் ஏராளமான பயணிகள் ரெயில் நிறுத்தப்பட்டது. தற்போது இயல்புநிலை திரும்பியதால் அனைத்து பயணிகள் ரெயில்களும் எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் எப்போதும் அதிக பயணிகள் பயணம் செய்யும் விருதுநகர்&திருச்சி டெமுரெயில் தற்போது எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் காரைக்குடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
விருதுநகரில் இருந்து திருச்சி வரைஏராளமான பயணிகள் குறைந்த கட்டணத்தில் குறைவான பயண நேரத்தில் மதுரை செல்லாமல் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி புதுகோட்டை வழியாக எளிதாக பயணம் செய்ய முடிந்தது.
தற்போது எக்ஸ்பிரஸ் ரெயிலாக காரைக்குடி வரை மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் வரவேற்பு இன்றி வெறும் ரெயிலாக சென்று திரும்புகிறது. அதேபோல் காலை 6மணிக்கு புறப்படுவதால் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு செல்லும் அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவ&மாணவிகள் சரியான நேரத்திற்கு பயணம் செய்யமுடிவதில்லை.
தினமும் பயணிகள் ரெயிலாக சாதாரண கட்டணத்தில் விருதுநகரில் இருந்து காலை 5மணிக்கு புறப்பட்டு திருச்சி வரை இயக்கினால் விருதுநகர், சிவகங்கை, புதுகோட்டை மாவட்ட பயணிகள், கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள், வியாபாரிகளுக்கு பெரிதும் பயன் உள்ளதாக இருக்கும்.
சாதாரண கட்டணத்தில் விருதுநகரில் இருந்து திருச்சி வரை டெமுரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்க மதுரை ரெயில்வேகோட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






