என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை காணலாம்
  X
  பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை காணலாம்

  குற்றாலத்தில் நாட்டுத்துப்பாக்கியுடன் 3 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குற்றாலத்தில் போலீசாரை கண்டதும் ஓட முயன்ற 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, 14 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.
  தென்காசி:

  தென்காசி மாவட்டம் குற்றாலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் நேற்று குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  அப்போது அந்த பகுதியில் இருந்த 4 பேர் போலீசாரை கண்டதும் ஓட முயன்றனர். அதில் 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் ஒரு நாட்டு துப்பாக்கியும், 14 தோட்டாக்களும் இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  இதுகுறித்து குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

  அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் 3 பேரும் அதே ஊரை சேர்ந்த கனகராஜ் (வயது 40), அருண் (30), சிலம்பரசன்(35) என்பதும், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக அவர்கள் நாட்டுத்துப்பாக்கியை வைத்திருந்ததும் தெரியவந்தது.

  இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய சிலம்பரசனின் சகோதரர் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.  Next Story
  ×