என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீசார் விசாரணை
ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் கிராம நிர்வாக உதவியாளர் தற்கொலையா?- போலீசார் தீவிர விசாரணை
குன்னூரில் ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் கிராம நிர்வாக உதவியாளர் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த 27 வயது இளம்பெண். இவர் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இவரது கணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பின்னர் அந்த இளம்பெண் தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் அந்த இளம்பெண் கடந்த 22-ந் தேதி தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணையில் இந்த இளம்பெண் கணவரை இழந்து தனியாக வசித்து வந்தபோது குன்னூரை சேர்ந்த திருமணமான வாலிபருக்கும் அவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதும்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிய வந்ததால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது. போலீசாரின் முதல் தகவல் அறிக்கையிலும், காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் தற்கொலை செய்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே அந்த இளம்பெண்ணை கள்ளக்காதலன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிகிறது.
இதையடுத்து போலீசார் பெண்ணின் கள்ளக்காதலனான குன்னூரை சேர்ந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர், தனது நண்பர்கள் தான் அவரது தற்கொலைக்கு காரணம் என தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்டரா என்ற கோணத்தில் விசாரிக்க தொடங்கி உள்ளனர்.
மேலும் வீடியோவை அனுப்பி மிரட்டியதாக கூறப்படுவதால் செல்போனில் ஏதாவது தகவல்கள் இருக்கிறதா? என போலீசார் தேடி பார்த்தனர். ஆனால் இளம்பெண் இறந்த பின்பு அவரது செல்போனை காணவில்லை.அதனை எடுத்தவர்கள் யார்? எதற்காக எடுத்தனர் எனவும் விசாரிக்கின்றனர். அந்த செல்போன் கிடைத்த பின்னரே அதில் வீடியோ, ஆபாச போட்டோக்கள் உள்ளதா? என்பது குறித்து தெரியவரும் எனவும், இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story