என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு தேர்தல்
வேலூர்:
வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் இன்று நடந்தது.
வேலூர் மாநகர மாவட்டத்திற்கு அமைப்பு தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் எம்.பி.க்கள் வேணுகோபால், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காட்பாடியில் உள்ள வேலூர் மாநகர மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று தேர்தல் நடந்தது. இதில் பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள், பேரூராட்சி, நகராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் ஜோலார்பேட்டை ஆர்.எஸ். மஹால் திருமண மண்டபம் மற்றும் வாணியம்பாடி கட்சி அலுவலகத்தில் நடந்தது.
ராணிப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் அமைப்பு தேர்தல் நடந்தது.
இதேபோல் திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்திற்கு திருவண்ணாமலை அ.தி.மு.க. கட்சி அலுவலகத்திலும், தெற்கு மாவட்டத்திற்கு செய்யாறில் உள்ள கட்சி அலுவலகத்திலும் அமைப்பு தேர்தல் நடந்தது.






