என் மலர்
உள்ளூர் செய்திகள்

கணினி பட்டா முகாம்
கணினி பட்டா திருத்த முகாம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கணினி பட்டா திருத்த முகாம் நடந்தது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சமுதாய கூடத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கணினி திருத்தம் மற்றும் பட்டாமாறுதல் சிறப்புமுகாம் நடைபெற்றது.
முகாமில் திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் கந்தசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனிவட்டாட்சியர் சிவசம்போ, மண்டல துணைவட்டாட்சியர் செல்லமுத்து ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர், துணை கலெக்டர் வேலுமணி, பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவை வழங்கி னார்.
முகாமில் திருப்பத்தூர் பேரூராட்சி சேர்மன் கோகிலாராணி, கவுன்சிலர்கள் சையது முகம்மது ராபின், நேரு, அபுதாகிர், கோமதி சண்முகம், சரண்யா ஹரி, கண்ணன், ஷமீம், சாந்தி சோமசுந்தரம், சீனிவாசன், ஏகாம்பாள் கணேசன், ரெமி சுலை மான், நாகசுந்தரி திருஞான சம்பந்தம், பாண்டியன் மற்றும் வருவாய் ஆய்வாளர் மன்சூர்அலி, கிராமநிர்வாக அலுவலர் குணசேகரன், மணிகண்டன், வெங்கடேஷ் (எ) முத்துக்கருப்பன், உமா மகேஸ்வரி, பாலமுருகன், சீனிவாசன், நிலஅளவர் மகேஸ்வரி மற்றும் பலர் பங்கேற்றனர்.
முகாமில் 100க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு 37 கணினி பட்டாமாறுதல் மனுக்கள் பெறப்பட்டு அதில் 5மனுக்கள் உடனடி தீர்வாக பட்டா மாறுதல் வழங்கப்பட்டது.
Next Story






