என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    திருவள்ளூர் அருகே ஆசிரியர்களை நியமிக்க கோரி பள்ளியில் மாணவர்கள் போராட்டம்

    மாணவர்களின் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ள மாளந்தூர் கிராமத்தில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு மாளந்தூர், கல்பட்டு, ஆவாஜிப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் 13 ஆசிரியர் பணியாற்றி வந்த நிலையில் 8 ஆசிரியர்கள் பணி இட மாற்றமாகி சென்றுவிட்டனர். தற்போது தலைமையாசிரியர் மற்றும் ஒரு அறிவியல் மற்றும் 3 கணக்கு ஆசிரியர்கள் என 5 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர்.

    இதனால் இங்கு படிக்கும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டும் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் மாளந்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாத கண்ணடித்தும், கூடுதல் ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வலியுறுத்தியும் மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளிக்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு பெற்றோர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கம் ஆதரவளித்து உள்ளது.

    மாணவர்களின் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    Next Story
    ×