search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 உயர்வு

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,648-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    உக்ரைன்- ரஷியா போர் காரணமாக கடந்த மாத இறுதியில் தங்கம் விலை 40 ஆயிரத்தை தொட்டது. அதன்பின்னர் தங்கம் விலை சற்று குறைந்தாலும் ஒரே நிலையில் இல்லாமல் இருந்து வருகிறது . தினமும் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.

    ஆனால் கடந்த 4 நாட்களாக தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று கிராம் ரூ.4,794 ஆக இருந்த தங்கத்தின் விலை இன்று 37 ரூபாய் உயர்ந்து 4,831-ஆக விற்பனையாகிறது.

    பவுன் ரூ.38,352-ல் இருந்து ரூ.38,648ஆக அதிகரித்து உள்ளது. ஒரேநாளில் தங்கம் பவுனுக்கு ரூ.296 உயர்ந்து இருக்கிறது.

    இதே போல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்தது. கிராம் ரூ.72.40-ல் இருந்து ரூ.72.80 ஆகவும் ஒரு கிலோ ரூ.72,400-ல் இருந்து ரூ.72,800 ஆகவும் உயர்ந்து உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×