என் மலர்
உள்ளூர் செய்திகள்

பணியிட மாற்றம்
பாலியல் புகார்- ஒட்டன்சத்திரம் தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிட மாற்றம்
பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த ஒட்டன்சத்திரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் வடிவேல். இதே பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிபவர் நிர்மலாதேவி. இவரது பணிகளில் குறைபாடு இருந்ததால் தலைமை ஆசிரியர் வடிவேல் அடிக்கடி அவரை கண்டித்து வந்துள்ளார்.
அதே போல் தலைமை ஆசிரியர் வடிவேல் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக நிர்மலாதேவி புகார் தெரிவித்தார். இதுகுறித்து வேடசந்தூர் மாவட்ட கல்வி அலுவலர் கீதாவை விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கருப்புச்சாமி உத்தரவிட்டார்.
அதன்படி ஒட்டன்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கல்வி அலுவலர் கீதா அதன் அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் சமர்ப்பித்தார். இதனை தொடர்ந்து தலைமை ஆசிரியர் வடிவேல் குஜிலியம்பாறை அருகில் உள்ள ஆர்.வெள்ளோடு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆய்வக உதவியாளர் நிர்மலாதேவி பழனி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

Next Story