என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மது குடிக்க மனைவி பணம் தராததால் கணவர் தற்கொலை

    வேதாரண்யம் அருகே மது குடிக்க மனைவி பணம் தராததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தென்னடார் மேலகாடு கிராமத்தில் வசிப்பவர் மோகன் (வயது 65). இவர் தனது மனைவி ராஜலட்சுமி மற்றும் பேரன் விமல்குமார் வசித்து வருகிறார் மோகன் தனது மனைவி ராஜலட்சுமி இடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.

    அதற்கு மனைவி பணம் தர மறுத்துள்ளார் இதனால் விரக்தி அடைந்த கணவர் மோகன் வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்து விட்டார் ஆபத்தான நிலையில் மோகனை சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் இறந்துவிட்டார்.

    இதுகுறித்து போலீசார் வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×